மனித நல அறக்கட்டளை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள்

  1. PM Cares திட்டம்:

    கொரோனா காலத்தில் 2021 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 22 வரை, தன் பெற்றோர்களை இறந்த குழந்தைகளுக்கு ரூ. 4,000 மாதம், 23 வயதாகும் போது ரூ. 10 லட்சம் உதவி தொகை மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டமும் வழங்கப்படுகிறது
    குறிப்பு: தமிழ்நாடு அளவில் 426 குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்

  2. நிதி ஆதரவு திட்டம் [Mission Vatsalya ] :

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விதவை தாய்மார்களின் மாணவ செல்வங்கள், முற்றிலும் பெற்றோரை இழந்த மாணவ செல்வங்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோரை பிரிந்து வாழும் மாணவச் செல்வங்கள் அவர்களின் கல்வி [ 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ] செலவுக்காக ரூ 4,000 மாத உதவி திட்டம் ( 3 வருடங்கள்)
    தொடர்புக்கு: குழந்தைகள் நலத்துறை / சமூக நலத்துறை

  3. வித்யலட்சுமி கல்வி கடன் திட்டம்: ( Vidya Lakshmi ) :

    மாணவ மாணவிகள், கல்வி கடனுக்கு எளிய முறையில் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து, வங்கியின் மூலம் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
    தொடர்புக்கு: பொதுவான சேவை மையம் / www.vidyalakshmi.co.in

  4. கல்வி உரிமைச் சட்டம்: (RTE):

    6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவச கல்வியை இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கலாம்.
    தொடர்புக்கு:பொதுவான சேவை மையம் / www.dge.tn.gov.in/www.tnschool.gov.in

  5. பாரதப் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் [ PM Poshan]:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு சமைத்த சூடான உணவு தானியங்கள் வழங்குதல்
    தொடர்புக்கு: அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்

  6. திறமை இந்தியா திட்டம் (PMKVY) :

    இளைஞர்களுக்கு உரிய திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் மூலம் அவர்களது உற்பத்தி திறமையை ஊக்குவித்தல் மற்றும் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்
    தொடர்புக்கு: அருகில் உள்ள PMKVY பயிற்சி மையங்கள் / www.pmkvyofficial.org

  7. மத்திய அரசு வேலை வாய்ப்பு: ( Rozgar Yojana)

    18 வயது முதல் 40 வயது உள்ள இளைஞர்கள், 10 லட்சம் பேருக்கு பல்வேறு துறைகளில் மத்திய அரசு பணியினை வழங்குவது.
    தகவல்களுக்கு : www.ncs.gov.in/pages/govt-job-vacancies.aspx

  8. வளரும் இந்தியா பள்ளிகள் (PM Shri):

    நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பள்ளிகளின் தரம், ஸ்மார்ட் வகுப்பு, கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி, விளையாட்டு துறை மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதன் மூலம் பள்ளிகளின் தளத்தை மேம்படுத்துவது.
    குறிப்பு: ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 27,360 கோடிகள், அதில் மத்திய அரசு பங்கு 18,128 கோடி.
    தகவல்களுக்கு: www.pmshrischools.education.gov.in

  9. பெண் பிள்ளைகளுக்கான போட்டி தேர்வுக்கான பயிற்சி திட்டம் [ CBSE Udaan ]:

    பொறியியல் [NIIT / IIT / CFIT ] போட்டி தேர்வுக்கு தயாராகும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளைகளுக்கான இலவச பயிற்சி, கேந்திர வித்யாலயா நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படுகிறது.
    மேலும் தகவல்களுக்கு: www.india.gov.in/spotlight/udaan-program-give-wings-girl-students

  10. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் இணைய வழி கல்வி திட்டம்: ( DIKSHA )

    1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், DIKSHA என்ற இணையதளம் வாயிலாக இலவச கல்வி பயிலலாம்.
    தொடர்புக்கு: www.diksha.gov.in

  11. இலவச DTH கல்வி சேனல் திட்டம் [ Swayam Prabha ]:

    பள்ளி வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ மாணவிகள் ஸ்வயம் பிரபா தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளத்தின் வாயிலாகவும் இலவச கல்வி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.
    தொடர்புக்கு: www.swayamprabha.gov.in

  12. பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [NATS]:

    பட்டதாரிகள், டிப்ளமோ, பெண்கள் மற்றும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திறன் பயிற்சிகளை வழங்குதல் [ ஒரு வருட திட்டமாகும்].
    பயிற்சி காலத்தின் போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, அதில் 50% மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படுகிறது.
    தொடர்புக்கு: தனியார் தொழிற்சாலை / https://portal.mhrdnats.gov.in/boat/login/user login.action

  13. பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [NAPS ]:

    இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, தனியார் தொழிற்சாலைகளில் பணியமர்த்துவது.
    மத்திய அரசாங்கம் பயிற்சிக்காக ரூ. 7,500 நிறுவனங்களுக்கும் மற்றும் தலா ஒரு இளைஞர்க்கு ரூ 1,500 மாதம் மாதம் வழங்குகிறது.
    தொடர்புக்கு: தனியார் தொழிற்சாலைகள் /www.apprenticeship.gov.in

  14. இளைஞர்களுக்கான தன்னார்வாலர் திட்டம் [NYC ]:

    18 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் தேசத்திற்காக முழு நேரமாக, ஊக்க ஊதியம் ரூ. 5000 அடிப்படையில் இரண்டு வருடங்கள் தேசத்திற்காக பணியாற்றலாம்.
    தொடர்புக்கு: நேரு யுவகேந்திரா மையம் /www.nyks.nic.in

  15. இளைஞர்களின் சுற்றுலா விடுதி திட்டம்: [YHAI]

    இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்லும்போது, குறைவான கட்டண விடுதி வசதி.
    தொடர்புக்கு: https://www.yhaindia.org/

  16. நவோதயா பள்ளிகள்:

    உலகத் தரமான படிப்புகள், மிக குறைவான மாத கட்டணத்தில் ( ரூ. 200 முதல் ரூ. 600 வரை ) மத்திய அரசின் கீழ் இயக்கப்பட்டு வரும் ஒர் பள்ளி தகவல்களுக்கு: www.navodaya.gov.in

  17. கேலோ விளையாடு இந்தியா திட்டம் [Khelo ]:

    17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகள் அளவில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு ரூ 5 லட்சம் வருடாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது.
    மேலும் தகவல்களுக்கு: www.kheloindia.gov.in

  18. இளைஞர்களுக்கான சூரிய மித்ரா திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் [SSDP]:

    வேலையில்லாத டிப்ளமோ, ஐ டி.ஐ படித்த இளைஞர்களுக்கு, 100 நாட்கள் தங்குமிடம், உணவு, சீருடை உட்பட இலவச சூரிய சக்தி மின் உற்பத்தி பயிற்சி.
    தொடர்புக்கு: www.suyamitra.nise.res.in

  19. பாரதப் பிரதமரின் இளையோர் பயிற்சி திட்டம் [ Yuva Yojana ]:

    இளம் தொழில் முனைவோர்களை கண்டறிந்து, ஊக்க தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி
    தொடர்புக்கு: National Skill Development Corporation / www.startupindia.gov.in

  20. அனைவருக்கும் கட்டாய கல்வி [ SSA ]:

    6 முதல் 14 வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
    2022 to 2023 ரூ 37,383 நகாடி ஒதுக்கீடு & 2023 to 2024 ரூ. 37,453 நகாடி ஒதுக்கீடு.
    தகவல்களுக்கு : DEO அலுவலகம் / www.samara.education.gov.in

  21. சங்கல்ப் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: [ SANKALP]

    தொழில்துறைக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழிற்திறன் சார்ந்த பயிற்சிகள் இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.
    தொடர்புக்கு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் கிண்டி, சென்னை / www.msde.gov.in/ www.tnskill.tn.gov.in

  22. SC மற்றும் OBC மாணவர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திட்டம்:

    ஆண்டுதோறும் மே மாதத்தில் 3,500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 12 மாதங்களுக்கு மிகாமல் பாடத்திட்டத்தின் முழு காலத்திற்கும் மாதம் ரூ. 4,000 உதவித்தொகையுடன் கூடிய இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள்
    மேலும் தகவல்களுக்கு: https://coaching.dosje.gov.in/(S(k4lcxje3ruqczvw1lhryyctp))/Home.aspx

  23. நாட்டு நலப்பணி திட்டம் [NSS]:

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சேவை சிந்தனையை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் பிரதிபலிக்கிறது.
    தொடர்புக்கு: பள்ளிகள்.

  24. தேசிய தனியார் நிறுவன வேலைவாய்ப்பு அமைப்பு [ NCS ]:

    படித்த இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம், நிறுவன நேர்காணல் மூலமாக இந்த அமைப்பை இலவசமாக ஏற்படுத்தித் தருகிறது
    தொடர்புக்கு: www.ncs.gov.in

  25. அடல் இன்னோவேஷன் திட்டம் (AIM):

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புத்தாக்க சிந்தனைகளை வளர்க்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 10 கோடி வரை இன்குபேஷன் மையம் அமைக்க மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது,.
    தகவல்களுக்கு: www.aimapp2aim.gov.in/ www.aim.gov.in

  26. அக்னிபாத் திட்டம் [ Agni ]:

    இளம் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள், அரசு ஊதியத்துடன் தேசத்திற்காக பணியாற்றுவதற்கான திட்டம்.
    தொடர்புக்கு: www.indianairforce.nic.in/agniveer